BREAKING NEWS

Monday, December 14, 2015

உன் தகுதியை நீயே உரக்கச் சொல் – ஜூலியஸ் சீஸர்

Julius Ceasar : 
கி.மு. 75-ம் வருடம். சட்ட திட்டங்களில் நிபுணத்துவம் பெறுவதற்காக, கிரேக்க நாட்டுக்கு கடல் வழிப் பயணமானார் 25 வயது இைளஞரான ஜூலியஸ் சீஸர். எதிர்பாராதவிதமாக கப்பலில் இருந்த அனைவரும் கடற்கொள்ய‌ளயர்களால் பிடிக்கப்பட்டார்கள். ‘20 தங்கக் காசுகள் கொடுத்தால், உங்கள் நபைர விடுதைல செய்கிறோம்’ என ஒவ்வொருவரின் நாட்டுக்கும் தனித்தனியாகத் தகவல் அனுப்பினார்கள். உடேன ஸீஸர் கோபமாகி, ‘‘என் விலை 20 தங்கக்
காசுகள்தானா?! என்னைக் கேவலப்படுத்தாதீர்கள். 50 தங்கக் காசுகளாவது கேளுங்கள்’’ என்றார் தோரைணேயாடு. கொள்ளையர்கள் அலட்சியமாகச் சிரிக்க, ‘‘சிரிக்காதீர்கள்.
உங்கள் அனைவரையும் கழுத்தை அறுத்துக் கொன்றுவிட என்னால் முடியும்’’ என்றார். கொள்ளையர்கள் மேலும் சிரித்தார்கள். சக பயணி ஒருவர், ‘‘எதற்காக இப்படி உன்னை நீயெ உயர்வாகப் பேசி கொள்கிறாய்! அது உனக்கே ஆபத்தாக முடியலாம்’’ என்று எச்சரிக்க, ‘‘நான் யார் என்பைத நான்தான் சொல்ல வேண்டும். எனக்காகப் பிறர் விளம்பரம் செய்யமாட்டார்கள். அரச நீதி நூல்களில் சொல்லியிருப்பைதத்தான் நான் கைடப்பிடித்து வருகிறேன்’’ என்றார் சீஸர்.
பின்னர், 38 நாட்கள் பயணக் கைதியாக இருந்து வெளியே வந்ததும், வரம் மிக்க ஆட்கைளத் திரட்டிக்கொண்டு போய் கடற்கொள்ளையர்களுடன் போரிட்டு, தான் சொன்னது போலவே அவர்கள் அத்தைன பேரையும் கழுத்தை அறுத்துக் கொன்றார். இந்த வெற்றியைப் பெரும் பொருட்செலவு செய்து கொண்டாடினார். ‘‘ஏன் இப்படிச் சுய தம்பட்டம் அடிக்கிறர்கள்?’’ எனப் பிறர் கேட்டேபாது, ‘‘உன் தகுதியை நீயே உரக்கச் சொல். பிறருக்காகக் காத்திருக்காதே!’’ என கூறினார்.
சுமார் ஒன்பது ஆண்டுகள் நடந்த இந்த ‘கவுல்’ போராட்டத்தில், சுமார் இருபது லட்சம் பழங்குடியினர் கொல்லப்பட்டனர். பத்து லட்சம் பேர் அடிமைகளாக விற்கப்பட்டனர். இந்தப் போர், சீஸ‌ருக்கு செனட் சைபயிலும், மக்கள் மனதிலும் நிரந்தர இடத்தையும், பெரும் வரன் என்கிற புகைழயும் பெற்றுத் தந்தது.அறுவை சிகிச்சை மூலம் பிறந்த முதல் குழந்தை ஜூலியஸ் சீஸர். ரோம் நகர அதிகாரத்தில் இருந்த மரியஸ், சஸரின் உறவினர். எனேவ, சஸரால் மிக எளிதாக பைடத் தைலவராகி, போர்களில் பங்கேற்று வெற்றிகள் குவிக்க முடிந்தது. மரியஸுக்குப் பின் ஆட்சியைப் பிடித்த ‘சுல்லா’வின் பேத்தியைத் திருமணம் செய்துகொண்டு, செனட் சைபயில் முக்கிய இடம் பிடித்தார் சஸர். மிகப் பெரரும் செலவில் பிரமாண்டமான ஸ்டேடியம் அமைத்து, ‘அடிமைகளின் மரண விளையாட்டு’ நடத்தி, மக்களிடம் பெரும் புகழ் பெற்றார். கி.மு.58-ல் ஐேராப்பிய கண்டங்களில் உள்ள பல்வேறு நாடுகளில் வாழ்ந்து வந்த பழங்குடிகள் இடம்பெயர்ந்து, ‘கவுல்’ நோக்கி வருகிறார்கள் என்றதும், அவர்களால் ரோம் நகருக்கு ஆபத்து வருமெனப் பைடயுடன் கிளம்பினார் சீஸர்.
ரோம் நகரின் அறிவிக்கப்படாத சர்வாதிகாரியாகச் செயல்படத் தொடங்கினார் ஜூலியஸ் சீஸர். ரோமன் காலண்டர் மாற்றியைமக்கப்பட்டது. நகெரங்கும் சஸரின் சிலைகள் நிறுவப்பட்டன. நாணயங்களில் அவரது உருவம் பொறிக்கப்பட்டது. தன் புகழ் இந்த பூமி உள்ளவைர நிலைத்து நிற்க வேண்டும் என்பதற்காக, பெரும் செலவுகள் செய்தார் சீஸர். அவைர இனியும் விட்டுவைத்தால், ரோம் சரழிந்துவிடும் என அவருக்கு வேண்டப்பட்டவர்கள் சிலேர கொல்லத் துணிந்தார்கள்.
எல்லோரும் அவைரக் கத்தியால் குத்த, மகன் போல் தான் நினைத்திருந்த புரூட்டஸிடம் ஓடினார் சஸர். அவனும் கத்தியெடுத்துக் குத்தேவ, ‘‘யூ டூ புரூட்டஸ்’’ என்று பதறித் துடித்தபடி உயிரைவிட்டார். ஜூலியஸ் சஸர் விமர்சனத்துக்கு உரியவராக இருந்தாலும், அவைரப் புகழின் உச்சியில் ஏற்றிவைத்தது, ‘உன் தகுதியை நேய உரக்கச் சொல்ல். பிறருக்காகக் காத்திருக்காதே!’ என்கிற அவரது மந்திரச் சொல்தான்.

Sunday, December 13, 2015

உங்கள் Facebook ஐ கொண்டு உங்களை அறிந்துகொள்ள ஒரு மென்பொருள். – அறிமுகம்

கேம்பிறிட்ஜ் (Cambridge) பல்கலைகழகம் புதிய இணைய மென்பொருளொன்றை  அறிமுகம் செய்துள்ளது.
Facebook இல் நீங்கள் இதுவரை செய்த likes ஐ வைத்து உங்கள் மனோவியல் தொடர்பான ஒரு அறிக்கையை இவ் மென்பொருள் சமர்ப்பிக்கும்.
முக்கியமான ஐந்து பிரிவுகளாக இது பயணர்களை வகைப்படுத்துகிறது. நண்பர்கள் மற்றும் வேலை சகாக்கள் ஒருவரின் மனோனிலையை தீர்மானிப்பதை விட இது துல்லியமாக தீர்மானிக்கும் என கூறப்படுகிறது.
‘Apply Magic Sauce’ என அழைக்கப்படும் இவ் மென்பொருளில் உங்கள் Facebook பயணர் கணக்கு மூலம் நுழைந்து அறிக்கையை பெறலாம்.
image

எந்த device இலும் அழிந்த தரவுகளை மீட்கலாம்.


tamil technologyகணினியில் அழிந்த தரவுகளை மீட்டெடுக்க உதவும் ஒரு மென்பொருள். Portable மென்பொருளாக உள்ளமையால் கணினியில் நிறுவத்தேவையில்லை. இலகுவாக USB (விரலி) களில் கொண்டு செல்லலாம்.
சிறப்புக்கள் :
  • எந்தவகை வந்தட்டுக்களுக்கும் இயைபுடையது. (ATA, SATA, SCSI, USB, IEEE1394.)
  • iPod இல் இருந்தும் தரவுகளை மீட்க உதவும்.
  • FAT12, FAT16, VFAT, FAT32, NTFS/NTFS5, EXT2 மற்றும் EXT3 போன்ற இயக்கங்களுக்கு ஏற்புடையது.
  • USB, digital cameras, MP3 player களில் இருந்தும் தரவுகளை மீட்க உதவுகிறது.
  • இலகுவான பாவனை அமைப்பு.
  • ஒரே சொடுகில் தரவுகளை மீட்க முடியும்.
அளவு :  9.5 Mb
தரவிறக்க : source1   

Friday, December 11, 2015

இணையமில்லா நேரத்திலும் முகநூலை அணுகலாம்



இணையமில்லா சேவைகளை  கூகுளின் வரைபட பயன்பாட்டில் தொடங்கியது முதல், அந்த வரிசையில் அடுத்தகட்டமாக முகநூல் அடுத்தபடியாக இணையமில்லாமல் முகநூலை அணுகும் சிறப்பை பயனர்களுக்கு தந்துள்ளது. ஆகையால் இணைய இணைப்புமெதுவாக இருக்கும்போதிலோ அல்லாது நெட்வொர்க்குகள் கிடைக்காத  தருணத்திலோ முகநூலில் செய்திகளை  எழுதலாம் . மற்றும் செய்திகளுக்கு கருத்துகளையும் தெரிவிக்கலாம். அவையனைத்துமே சரியான இணையதள இணைப்பை  பெற்றவுடன்  முகநூளில்  வெளியிடப்படும்.  இதனால் 2G  இணைப்பையோ அல்லது குறைவான டேடாக்களை  மட்டுமே கொண்ட பயனர்களுக்கும் , இணையத்தை அணுக முடியாமல் இருக்கும் பயனர்களுக்கும் பெரிதாக கைகொடுக்கும். முகநூளின் இத்தகைய முயற்சியால்   நாம் அவ்வப்போது வெளியிட நினைக்கும் கருத்துக்கள் அனைத்தையும் உடனுக்குடன்  ஒரு டைரியில் குறித்து வைப்பது  போன்று  குறித்து வைத்து பின் இணையமுள்ள நேரங்களில் வெளியிடலாம்.

facebook-android

உதாரணமாக ஒருவரின்    பிறந்த நாளன்று வாழ்த்து சொல்ல விரும்புகையில் அவர்களிடம்  இணையமில்லாத   போது    நம் கருத்துகளையும் வாழ்த்துகளையும் எழுதி  வைத்தால் அவற்றினை  இணையத்தினை  அணுகும்போது   செய்திகள் வெளியிடப்படும். இதனால் குறிப்பிட்ட    அந்த நேரத்தில் இணையமில்லாததால் செய்திகளை அனுப்ப முடியவில்லை என்பதனை புரிந்து கொள்ள முடியும். பயனங்களின் போதான நேரங்களில்   பெரும்பாலாக இணையத்தை அணுக முடியாது. அந்த மாதிரி சமயங்களில்  கண்டிப்பாக நேரத்தை பயனுள்ளதாக செலவிட உதவும். இதனால் முன்பை விட பயனர்கள் அதிக நேரத்தினை முகநூளில் செலவிட வாய்ப்புள்ளது.

Tuesday, December 1, 2015

அடாப்டின் உதவியுடன் மற்றவர்களுக்கு தெரியக்கூடாது என்று எண்ணுகிற சொந்த தகவல்களை மறைக்கலாம் :

Saturday, November 14, 2015

அதீத நீர் மட்ட உயர்வு அடுத்த நூற்றாண்டுக்குள் 6 மீட்டர் தரை வரை மூழ்கும் அபாயம்.

நாம் நினைப்பதை விட அதிவேகத்தில் கடல் நீர்மட்டம் உயர்ந்துவருவதாக நாசா சமீபத்தில் அச்சம் தெரிவித்துள்ளது.

பூமியின் தரைப்பகுதியில் உருவாகும் வெப்பம் கடல், சமுத்திரங்களின் தரையை அடையும்போது அண்ணளவாக வெள்ளிக்கிரகத்தின் மேற்புற வெப்ப நிலைக்கு ஒப்பாக நிலைகொள்கிறதென அறியப்பட்டுள்ளது.

கடந்த 22 ஆண்டுகளில் மாத்திரம் கடல் நீர் மட்டம் 7 cm உயர்ந்துள்ளது. ஆண்டுக்கு உயர்வு வீதம் 1.9 mm ஆக உள்ளது.

இதே நிலையில் நீடித்தால் அடுத்த நூற்றாண்டு நடு பகுதியில் சுமார் 6.4 m வரை நீர்மட்டம் உயரும்.
தொழில் சாலைகளின் எண்ணிக்கை அதிக்கை அதிகரிப்பதனாலும் அவற்றின் புகைவெளியீடு மீது திட்டவட்ட நடவடிக்கைகள் இல்லாமையாலும் நீர் மட்ட உயர்வு இன்னும் அதீத வேகத்தில் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

கிறீன்லாந்து ,அண்டார்டிக்கா பகுதியின் பனிமலைகள் வெப்ப சரிவடைவதே நீர்மட்ட உயர்விற்கு காரணமாக உள்ளது.

அவ் முழு பனி மலைகளும் உருகுமாயின் புவியின் நீர்மட்டம் சுமார்  60 m வரை உயரும்.

அவ்வாறான ஒரு நிலையில் உலக வரைபடத்தில் இருந்து பல நாடுகள் இல்லாமல் போகும்.

நமது பூட்டக்குழந்தை வாழ்வதற்காக, உங்கள் வாகனங்களின் காபன் வெளியீட்டை சரிபார்த்துவிட்டீர்களா?


image

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன்களுக்கு பரவும் புதிய ஆபத்து...! (இலகுவில் நீக்க முடியாதது)

இன்று உலகில் பயன்படுத்தப்படும் ஸ்மார்ட் போன்களில் அதிகமான ஸ்மார்ட் போன்கள் கூகுளின் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டே இயங்குகின்றன.

ஆண்ட்ராய்டு ஆபத்து


இதன் மூலம் ஏராளமான பயன்களை பெற முடிந்தாலும் கூட சில சந்தர்பங்களில் எம்மை எரிச்சலடைய செய்யக்கூடிய அல்லது பேராபத்தை தரக்கூடிய நிகழ்வுகளும் ஏற்படுவதுண்டு.



அந்தவகையில் சில மாதங்களுக்கு முன்பு   "ஸ்டேஜ்ப்ரைட்" எனும் ஆண்ட்ராய்டு சாதனங்களுக்கான வைரஸ் மிக வேகமாக பரவி வந்தது.

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் பாதிக்கும் புதிய வைரஸ் நிரல் 

தற்பொழுது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன்களுக்கு பரவி வரும் புதிய மூன்று வைரஸ் நிரல்களும் Lookout Security நிறுவனத்தால் இனங்காணப்பட்டுள்ளது.

Shuanet, Shedun மற்றும் ShiftyBug எனும் மூன்று நிரல்களே இவைகளாகும். இந்த நிரல்கள் உள்ளடக்கப்பட்ட பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப், Candy Crush போன்ற செயலிகள் உட்பட 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செயலிகள் Lookout நிறுவனத்தால் கண்டறியப்பட்டுள்ளது.

இவற்றின் பாதிப்புக்கள் அமெரிக்கா, ஜேர்மனி, ஈரான், ரஷ்யா, இந்தியா, ஜமைக்கா, சூடான், பிரேசில், மெக்ஸிக்கோ, மற்றும் இந்தோனேஷியா போன்ற நாடுகளில் அதிகம் இனங்காணப்பட்டுள்ளன.

இந்த வைரஸ் நிரல் ஸ்மார்ட் போன்களுக்கு எவ்வாறு பரவுகின்றன?


மேற்குறிப்பிடப்பட்ட நிரல்களால் பாதிக்கப்பட்ட செயலிகளை நீங்கள் தரவிறக்கும் போது இவைகள் உங்கள் ஸ்மார்ட் போன்களில் வந்தமர்ந்து கொள்கின்றன. எனினும் நீங்கள் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து செயலிகளை தரவிறக்கும் போது இவ்வாறன பாதிப்புக்கள் ஏற்படாது. (APK புவர் தளமும் பாதுகாப்பானதே)

எனினும் மூன்றாம் நபர் தளங்களில் இருந்து APK கோப்புக்களை தரவிறக்கும் போது இது போன்ற வைரஸ் நிரல்களால் பாதிப்படைந்த செயலிகள் உங்கள் ஸ்மார்ட் போன்களுக்கு வந்தடைகின்றன.


இதனால் ஏற்படும் பாதிப்பு என்ன?


இவற்றின் பிரதான செயற்பாடு விளம்பரங்களை காட்சிப்படுத்துவதே ஆகும். எனவே பாதிக்கப்பட்ட உங்கள்மொபைல் சாதனத்தில் எரிச்சலூட்டும் வகையில் விளம்பரங்கள் தோன்றும்.


இவற்றில் இருந்து மீளுவது எப்படி?


துரதிஷ்டவசமாக இவற்றை இலகுவில் நீக்கிக் கொள்ள முடியாது. காரணம் இவைகளால் உங்கள் ஸ்மார்ட் போன் பாதிக்கப்பட்ட உடன் உங்களை அறியாமலேயே உங்கள் ஸ்மார்ட் போன் "ரூட்" செய்யப்படுகின்றன. எனவே நீங்கள் உங்கள் ஸ்மார்ட் போனை Factory Reset செய்தாலும் கூட இவைகள் மீளுவும் இயங்கத் துவங்கி விடும். 

முன்னேற்பாடுகள் ஏதும் உண்டா?


வந்த பின் யேசிப்பதை விட வரும் முன் காப்பதே சிறந்தது. எனவே நீங்கள் செயலிகளை தரவிறக்கும் போது முடியுமானவரை கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து செயலிகளை தரவிறக்குங்கள். நம்பகரமான தொழில்நுட்ப தளங்களால் பரிந்துரைக்கப்படாத அல்லது சந்தேகத்துக்கு இடமான APK கோப்புக்களை எவ்விதத்திலும் தரவிறக்கி நிறுவ வேண்டாம்.

மேலும் உங்கள் ஆண்ட்ராய்டு போனின் Settings ===> Security பகுதியில் Unknown Sources என்பதில் இருக்கும் Tick அடையாளத்தை நீக்கி விடுக.

Friday, November 13, 2015

உணவு அச்சிடும் 3D இயந்திரம்! | எதிர்கால உணவு தயாரிப்பு

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் முப்பரிமான அச்சு இயந்திரங்கள் (3D Printers) பிரபலமாகத்தொடங்கின. இன்னும் அது முழுமையான பொதுப்பாவணைக்கு வரமுன்னரே இப்போது அதன் அடுத்த கட்டமாக புதிய ஒரு தொழில் நுட்பம் முன்னோட்டமுறையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

முப்பரிமான உணவு அச்சீட்டு இயந்திரமாக அறிமுகமாகியிருக்கும் இவ் இயந்திரம் உணவுகளை தயாரிப்பதற்கு உதவவுள்ளது. அதாவது, பிரபல ஆங்கில திரைப்படங்கள் சிலவற்றில் எதிர்வு கூறப்பட்ட எதிர்கால உணவு தயாரிப்பு முறைகளுக்கு ஒரு முதல் படி இயந்திரமாக இது உருவாகியுள்ளது.

சாதாரண உணவுகள் அனைத்தையும் இதில் தயாரிக்க முடியாவிட்டாலும் ஆரம்ப கட்டத்தில் சில வகை பழங்களின் சுவையை உடைய உணவுகளை இவ் இயந்திரம் அச்சிடவல்லது!

அதாவது, chocolate, vanilla, mint (புதினா) போன்ற வகை சுவைகளையுடைய பதார்த்தங்களை இது அச்சிடக்கூடியது.
இதன் தயாரிப்பாளர்கள், எதிர் காலத்தில் இவ்வகை இயந்திரங்களால் ஒரு hamburger(ஹம்பேர்கர்) ஐ கூட உருவாக்க முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Foodini என அழைக்கப்படும் இவ் இயந்திரம் பற்றிய மேலதிக விபரங்களை கூகுளில் தேடலாம்.


தசாவதாரமும் டார்வினிசமும் ! (Hindusim Vs darwinism)

இந்திய இந்து புராணங்கள் அணைத்தும் உண்மை தத்துவங்களை மக்கள் மனதில் எளிதில் பதிய கற்பனை கலந்து எழுதப்பட்ட காவியங்கள், கதைகள். அவற்றின் உள்ள கருத்துகளை மேம் போக்காக பார்க்காமல் ஊன்றி கவனித்தால் மட்டுமே அவ்வுண்மைகளை புரிந்து கொள்ள இயலும்.

தசவதாரம் அதில் ஒன்று. தசாவதாரம் நமக்கு சொல்லும் கருத்துகள் இவ்வுலகம் தோன்றியது எப்படி ? மற்றும் அதில் உயிர்கள் எப்படி படிப்படியாக தோன்றின என்பது. இது டார்வின் கோட்பாடான பரிணாம வளர்ச்சியின் அடிப்படை உண்மைகளை நமக்குத்தெரிவிக்கிறது.

இந்திய நாட்டில் வாழ்ந்த பேரறிஞர்கள் தெள்ளத்தெளிவாகவும் பரிணாமக்கொள்கையை வெளியிட்டிருக்கிறார்கள்.

பரிணாம வளர்ச்சியின் தோற்றம் நீரிலிருந்து தொடங்குகிறது. முதலில் நீர் பாசி இதிலிருந்து புழு, பூச்சி, நத்தை, மீன், தவளை, ஆமை, பாம்பு, பல்லி, எலி, பெருச்சாளி, பன்றி, கரடி,எருமை,யானை, ஓநாய்,புலி,சிங்கம், முதலிய ஜீவப் பிராணிகள் தோன்றின இறுதியில் குரங்கு. குரங்கிலிருந்து மூதாதையினத்தின் ஒரு பிரிவு கால கிரம வளர்ச்சியின் பின் மனிதன்.

பரிணாம வளர்ச்சி என்பது ஒன்றிலிருந்து ஒன்று என்பதை கவனத்தில் கொள்ளவும்.

73 வருடங்கள் வாழ்ந்த மாமேதை டார்வின் [1809 – 1882
பற்றி சில தகவல்கள் :

இரண்டாயிரத்து முப்பது ஆண்டுகளுக்கு முன் கிரேக்க நாட்டு பேரறிஞன் அரிஸ்டாட்டில் பரிணாமதத்துவத்திற்கு வித்திட்டார்.

அவரின் கூற்று ‘சத்தியத்தின் உரைக்கல் ஞானம் அல்ல இயற்கைதான் அதற்கு உரைக்கல்’

வைத்தியரான இராமஸ் டார்வின் (சார்லஸ் டார்வினுடைய தாத்தா) லிச்பீல்டு (இங்கிலாந்து) ல் வசித்தவர். உலகின் ஒவ்வொரு ஜீவராசியும் பரிணாம ரீதியில் வளர்ச்சி பெற்றவை என்ற கருத்தை எழுதி வைத்திருந்தார். ( மூன்றாம் ஜார்ஜ் மன்னர் காலத்தவர்) இவரின் மறைவுக்கு (1802) பிறகு பிரஞ்சு நாட்டின் விலங்கியில் வல்லுனர் லாமார்க் இவரின் கருத்துக்களை மூலாதாரமாக வைத்து விலங்கு சாஸ்திர தத்துவம் (1809) முதுகெலும்பு மிருகங்களின் சரித்திரம்.(1815) ஆகிய நூல்களை வெளியிட்டார்.

பரிணாம வளர்ச்சி பற்றி அவர் வகுத்த கொள்கைகள் ஒரே தினத்தில் எழுதப்பட்டவை அல்ல.

1859 ல் சார்லஸ் டார்வின் ஜீவராசிகளின் பரிணாமத் தத்துவத்தை வெளியிட்டார் (ஜீவராசிகளின் மூலம் 230 பக்கங்கள்) உலகின் எல்லா மதங்களும் இந்த தத்துவத்தை எதிர்த்தன. சம்பிரதாயப்பிடிகளை விட்டுவிட எந்த மதமும் ஒப்புக்கொள்ளலாது. அதனால் கண்ணைமூடி மறுதளித்தன. இன்றுவரை அவரின் கொள்கைக்கு எதிர்ப்பு இருந்து வருகிறது. ஆனால் நிரூபிக்கப் படவில்லை.

இந்து மதத் தத்துவங்களை குறிப்பாக ஆதிகால சிருஷ்டி தத்துவங்கள் சிலவற்றை மற்ற மதங்கள் தத்து எடுத்து கொண்டதாக சொல்கிறார்கள். பழைய ஏற்பாடான விவிலியத்தில் சொல்லப்படும் நோவா கால ஜல பிரளய கதை, ரோமானியர்கள் வணங்கும் நீரஸ் என்ற கடவுள் (மச்சவதாரம் – மீனுடல் மனித தலை) இவை சில உதாரணங்கள் [ … இங்கு தசாவதாரம் – டார்வினிஸத்தை பற்றி எழுதுவதால் இந்த கருத்துக்குள் அதிகம் செல்லவேண்டாம் என நினைக்கிறேன்…]

இயற்கை மீது அதீத பற்று கொண்ட டார்வினின் பல ஆண்டுகால உழைப்பு. பீகிள் எனும் கப்பலில் அவர் மேற்கொண்ட கடற்பயணம்(1831) தென் அமெரிக்க கடற்கரை, பகாஸ் தீவுகள், சாஹீதி,ஆஸ்திரேலியா, நியூஜிலாந்து, டாஸ்மானியா, மால்டிவ், மொரீசியஸ், செயின் ஹலினா, கேப்வொ தீவுகள், அஸோரஸ், அவரி வியக்க வைத்தது. திரும்ப வரும்போது அவரது பெட்டகத்தில் நிறைய உயிரினங்கள் நிரம்பியிருந்தது. இவற்றை வைத்து பல ஆண்டுகால ஆராய்ச்சியின் முடிவே பரிணாம தத்துவம்.

ஒரு ஆச்சர்யமான தகவல் ” மூட நம்பிக்கைகளுக்கு வேட்டு வைத்த டார்வின் இளவயதில் மதகுருவாக ஆசைப்பட்டவர்.”

டார்வினிஸத்திற்கும் இந்து மத தத்துவத்திற்கு முள்ள ஒப்புமைகள்.

இந்துக்களால் போற்றப்படும் விஷ்ணுவின் தசாவதாரம் டார்வினிஸத்துடன் ஒத்துப் போகிறது.

தசாவதாரத்தை கருத்தில் கொள்ளும் போது டார்வின் வகுத்தளித்த கருத்துகள் முன்னமேயே இந்திஸத்தில் போதிக்கப்பட்டு வந்துள்ளது விளங்கும்.

முக்கிய வளர்ச்சி பருவத்தைக் கொண்டு முதல் 5 அவதாரங்களின் உருவ அமைப்புகள் சித்தரிக்கப்பட்டுள்ளன. இவற்றிற்கு தாய் தந்தை இல்லை. ஒவ்வொரு அவதாரத்திற்கும் நான்கு கைகள்(வாமன அவதாரத்தை தவிர). அவ்விலங்கு பருவங்கள் நான்கு கால் உயிரினங்கள்.

வாழ்க்கை நீரிலிரிலிருந்து தொடங்குகிறது. இவற்றின் வளர்ச்சி 600 மிலியன் – 400 மிலியன் ஆண்டுகளுக்கு முன்.

முதல் அவதாரம் : மச்ச அவதாரம் (மீன்)
வாழ்க்கை நீரிலிரிலிருந்து தொடங்குகிறது. இவற்றின் வளர்ச்சி 600 மிலியன் – 400 மிலியன் ஆண்டுகளுக்கு முன்.

இரண்டாம் அவதாரம்: கூர்மம் (ஆமை)

நீரிலிருந்து நிலத்தில் நடப்பவை (amphibians) வளர்ச்சி 100 மிலியன் ஆண்டுகளுக்கு முன்.

மூன்றாம் அவதாரம் : வராகம் (பன்றி) : தரையில் வாழும் பாலூட்டி விலங்கு (mammals) 60 மிலியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்தவை.

நான்காவது அவதாரம் : நரசிம்மம் (மனித உருவில் உள்ள சிங்கம்) : பாதி மனிதன் பாதி சிங்கம் 30 மிலியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்தவை

ஐந்தாவது அவதாரம்:வாமன (குள்ளமான கரடி) Homo Erectus : ஆயுதம் அற்ற இரண்டு காலில் நடக்கும் உருவம். காலம் 5மிலியன் முதல் 2மிலியன் ஆண்டுகளுக்கு முன்.

இந்த ஐந்து அவதாரங்ளுக்கு அடுத்து வரும் 5 அவதார தத்துவங்கள் மனித இனத்தின் படிபடியான நாகரீக வளர்ச்சியை விளக்குவதாகும். ஆதிகால மனிதன் முதலில் நிலத்தை உழுது பயிரத்தெரிந்து கொண்டான் இது பரசுராம அவதாரம்.[ Homo Sapiens (350,000-100,000 years ago)] ஏற்கலப்பையுடன் இருப்பது காண்க.

பின்னர் ஆடுமாடுகளை தங்களின் வேலைகளுக்கு பயன்படுத்த கற்றுக்கொள்கிறான். இது கிருஷ்ணவதாரம்( மாடு மேய்ப்பவர்.)

இறுதியில் சமுதாய ஆட்சிமுறை அதை பலப்படுத்த போர் பயிற்சி பெற்றார்கள் மனித பரம்பரையின் வளர்ச்சி சரித்திரம். பிற்பட்ட அவதாரங்களின் விளக்கம்.

இராம அவதாரத்தில் துணைப்பாத்திரமாக அதி புத்திசாலியாகவும், பலம் பொருந்திய அனுமன் (குரங்கு) சித்தரிக்கப்பட்டது ஏன் ? இதை பரிசீலிக்கும் பொழுது முதல் ஐந்து அவதாரங்கள் முன்பே வெளிப்படுத்த பட்ட பின்னரே அடுத்த அவதாரங்கள் விளக்கப்படுகின்றன. அந்த விளக்கத்தின் போதே சிங்கத்திலிருந்து மனித உருவம் தோன்றவில்லை குரங்கினத்திலிருந்தே மனித இனம் தோன்றியது இதை முக்கிய தகவலாக இடை செருகப்பட்ட முக்கிய கதாபாத்திரமே அனுமன் எனவிளங்கிக்கொள்ளலாம்.

செயற்கை மழையும் யாகமும்! மறைந்த உண்மைகள்

செயற்கை மழை!
செயற்கை மழையைப்பற்றி எமது பாணியில் பார்க்கலாம்…

images18 ஆம் நூற்றாண்டின் பின்னர் அறிவு வளர்ந்து விட்டது என்று கூறிக்கொண்டு அளவில்லாமல் தேவையற்ற விதங்களில் காடுகளை அழித்து நகரங்களையும் தொழிற்சாலைகளையும் உருவாக்கியதன் விளைவாக பூமி அதற்கு முன்னர் அறியாத கால நிலை மாற்றங்களை சந்திக்கத்தொடங்கியது. ENVIRONMENT & POLLUTION 20 ஆம் நூற்றாண்டில் கால நிலை மாற்றம் உக்கிரமடைய அடிப்படை தேவையான இயற்கை விவசாயத்திற்கான மழை பல இடங்களில் பொய்த்துப்போக ஆரம்பித்தது. அதற்கு தீர்வு தேடி வழமைபோலவே அமெரிக்கா ஒரு திட்டத்தை வகுத்தது! அது தான் செயற்கை மழைத்திட்டம். (இத்திட்டத்தில் அமெரிக்காவும் கனடாவும் ஒன்றாக நிற்க சீன தன் பங்கிற்கு தனியாக தனது தேடலை ஆரம்பித்தது.)

cloud seeding tamil1957 ஆம் ஆண்டளவில் இத்திட்டத்தை எவ்வாறு நிறைவேற்றலாம் என்ற ஒரு உருப்படியான தீர்வு கிடைத்தது. விளைவு 1960களில் சீனா தனது முதல் செயற்கை மழையை பெய்ப்பித்துக்காட்டியது. இன்னும் மேம்பட்ட விதத்தில் அமெரிக்காவும் கனடாவும் 1970 ஆம் ஆண்டு வெற்றிகரமாக தேவையான நேரத்தில் தேவையான இடத்தில் மழையை பெய்ப்பிக்கும் ஆற்றலைப்பெற்றன.

செயற்கை மழையைப்பற்றி பேசும் போது நாம் ஒன்றைக்கவணித்தாக வேண்டும், செயற்கை மழை என்பது உண்மையில் முற்று முழுதாக செயற்கை மழை என்று சொல்லிவிட முடியாது!
ஆம், இன்னோர் இடத்தில் பெய்யவேண்டிய மழை மேகங்களை வலுக்கட்டாயமாக தேவைப்படும் இன்னோர் இடத்தில் கூட்டி அவற்றிற்கு ஊக்கிகள் மூலம் மழை மேக கருக்கட்டல்களை உருவாக்கி பெய்விப்பதே இந்த செயற்கை மழை!

சிம்பிலாக சொல்லவேண்டும் என்றால், மேகங்கள் மீது ஊக்குவிக்கும் இரசாயனங்களை தெளித்து மழையை பெய்விப்பது செயற்கை மழை என்று சொல்லிவிடலாம். ( இந்த பதிவிற்கு அது போதும்.)

சரி, 1970 களில் செயற்கை மழை வெற்றிகரமாக செயற்படுத்தப்பட்டு விட்டது. அதில் என்ன மர்மம் இருக்கிறது வரலாறு இருக்கிறது என்பதை இனிப்பார்க்கலாம்.

Ritual tamilநாம் எல்லாம் புராண கதைகள் என்ற பெயரில் சிறுவதில் இருந்து பல கதைகளை படித்திருக்கின்றோம். (ஹிந்தியில் எடுக்கப்பட்ட சில நாடக தொடர்களை கூட பார்த்திருக்கின்றோம். )
அதில் எல்லாம்… நாட்டில் மழை பெய்யவில்லை என்றது. உடனே அரசன் வழமை போல தனது மந்திரியின் தலையைப்பிடிக்க அவர் பூசாரிகளில் கையைப்பிடிக்க அதன் விளைவாக “யாகம்” என்ற பெயரில் பெரியதோர் கிடங்கில் பல வகை மரங்கள் திரவியங்களைப்போட்டு எரித்து புகைவரவைப்பார்கள். ( புகைவருவதற்கு மந்திரம் ஏன் என்பது தெரியவில்லை…. ஒரு வேளை நாம் பாட்டு பாடிட்டே வேலைகள் செய்வது போல் அவர்களும் ஏதோ முனுமுனுத்திருக்கலாம். அல்லது “பூசாரிகள்” மந்திரம் ஓதினால் தான் புகைவரும் என்ற ரீதியில் பில்டப் பண்ணி மந்திரம் சொல்லி இருக்கலாம். ( அப்படி செய்யாவிட்டால் அடுத்த கட்டத்தில் மந்திரி தானே இந்த திரவியங்கள் மரங்களை எரித்து புகை வரவைத்திருப்பார். பூசாரிகளின் தேவை இல்லாமல் போய் இருக்கும். பிழைப்பும் போய் இருக்கும்.) )

புகை என்றவுடனேயே பலருக்கு தெரிந்திருக்கும் நான் என்ன சொல்லவெருகிறேன் என்று!
ஆம், நாம் தற்போது செயற்கை இரயானங்களை விமானங்கள் மூலம் மேகங்களுக்கு மேலாக கொண்டு சென்று தெளிப்பதன் மூலம் மேகங்களை ஒன்றுகூட்டுகின்றோம். ஒரு வேளை அவர்கள் அந்த புகையை வானத்தை நோக்கி நகர்த்துவதன் மூலம் மேகங்களை ஒன்றுகூட்டி இருக்கலாம்!
மேகங்களை ஒன்று கூட்டக்கூடிய சக்தியுள்ள புகையை உருவாக்கத்தான் விசேட மரங்களும் திரவியங்களும் பயன்படுத்தப்பட்டிருக்கலாம்!

இன்று இரசாயன திரவியங்கள் மூலம் கூட்டப்பட்டு பெய்யப்படும் மழை, அன்று “யாகங்கள்” என்ற பெயரில் பெய்விக்கப்பட்டிருக்கும்.
ஆனால், நாம் “யாகம்” என்ற சொல்லையே கிட்டத்தட்ட காமெடி சொல்லாக்கி விட்டோம். நான் மேலே சொல்லி இருப்பவை கூட பலருக்கு காமெடி அல்லது இந்து மதத்தை பரப்புவனின் பதிவாக தெரியலாம். 

Ritualபுராண கதைகளில் யாகங்கள் மழைக்கும் செய்யப்படும். நாட்டில் பஞ்சம் என்றாலும் செய்யப்படும்.
அந்த பஞ்சத்திற்கு செய்யப்படும் யாகம் தொடர்பாக 2011 ஆம் ஆண்டளவில் ஒரு ஆராய்ச்சி முடிவு விளக்கம் கொடுக்கப்பட்டது.

அதாவது, யாகம் செய்யப்பட்ட இடத்தை அன்மித்து விதைக்கப்பட்ட தானியங்கள் சுமார் 2000 மடங்கு அதிவேக ஆரோக்கிய வளர்ச்சியை காண்பித்துள்ளன! சூழலில் தானியங்களை பாதிக்க கூடிய கிருமிகள் அழிக்கப்பட்டிருந்தன!
– இவை நிரூபிக்கப்பட்ட உண்மைகள். 
( இவ்வொரு யாகத்திலும், ஒவ்வொரு விதமான திரவியங்கள் பயன்படுத்தப்படுவதுண்டு!)

ஆனால் இப்போது யாகம் ஏன் செய்யப்படுகிறது என்பதை மறந்து, பூட்டிய கோவிலுக்குள் வாய்க்கு வந்ததை ஐயர் முனுமுனுத்துக்கொண்டு கையில் கிடைத்த வாசனை பொருட்களை எரிக்க அந்த வாசத்தை புனிதமாக கருதி பணத்தை கொடுத்து யாகம் செய்து கலாச்சாரத்தை காப்பாற்றுகிறோம் :)

ஞாபக மறதியை உண்டு பண்ணும் ஸ்மார்ட் போன்கள் !

நீங்களும் உங்கள் மொபைல் என்னை மனதில் நிலை நிறுத்த சிரமப்படுகுறீர்களா? அப்படியானால் நீங்களும் டிஜிட்டல் அம்னீசியாவால் பாதிக்கப்பட்டிருப்பீர்கள்.ஸ்மார்ட் போன்கள் எங்கள் கையில் எப்போதும் இருப்பதால் மொபைல் எண்ணையும் , வீட்டு முகவரியையும் கூட ஞாபக வைத்து கொள்வதில்லை என்று கூறும் இந்த நிலைமையையே நாம் டிஜிட்டல் அம்னீசியா என்கிறோம். இதனை பற்றி கேஸ்பர்ஸ்கை லேப் ஆராய்ச்சி செய்துள்ளது .
கேஸ்பர்ஸ்கை ஆராய்ச்சி கூடம் பதினாறு வயது மற்றும் அதற்கு கீழ் உள்ள 1000 நபர்களைக் கொண்டு இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளனர்.அவர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியின் படி 91% மக்கள் தங்கள் மூளைக்கு பதிலாக ஸ்மார்ட் போனையே நம்பியிருந்தது தெரிய வந்தது. மனிதர்கள் கட்டாயமாக அறிய வேண்டிய 50 சதவிகித தகவல்களை ஸ்மார்ட் போன்களே தெரிந்து வைத்திருக்கிறது.

Depression-and-memory-loss-290x213

இந்த செய்தியால் நாம் சிறு சிறு நினைவூட்டலுக்கு கூட ஸ்மார்ட் போன்களை நம்பியிருப்பது பற்றிய ஒரு விழிப்புணர்வைத் தந்தது ஒரு நற்செய்தியே என்று சைபர் நிருவனத்தின் நிர்வாக இயக்குனர் திரு .கிரிஸ் டாக்கட் கூறினார்.
சில சில விசயங்களுக்கு கூட ஸ்மார்ட் போன்கள் நம்மிடையே நிறைந்திருப்பதுதான் இந்த நிலைக்கு காரணம். மேலும் இந்த ஸ்மார்ட் போன்கள் குறுகிய கால நினைவுகளில் செயலிழக்கின்றன .இதனால் நீங்கள் ஒரு வேலை உங்கள் ஸ்மார்ட் போனை இழந்தால் அது உங்கள் மூளையின் ஒரு பகுதியை இழந்ததற்கு சமமாகும். இதனால் நம் நண்பரின் மொபைல் என்னை மட்டுமல்லாது பல நினைவூட்டக்கூடிய தருனங்களையும் , புகைப்படங்களையும் நாட்களையும் தான் இழக்க வேண்டியிருக்கும் .

இதில் முக முக்கியமான விஷயம் என்னவென்றால் நாம் எதையாவது நம் மொபைல் சாதனத்தில் குறித்து வைக்கும்போது தானாகவே நம் மூளை அந்த விஷயத்தை மனதில் பதிய வைக்க மறுக்கிறது. கேஸ்பர்ஸ்கை லேப் ஆராய்ச்சியின் படி 16 முதல் 24 வயதிற்குள் இருக்கும் நபர்களில் 25% மக்கள் தங்கள் ஸ்மார்ட் போனை தொலைத்து விட்டால் என்ன செய்வது என்ற கவலையில் இருந்தனர். ஏனெனில் அவர்கள் அவர்களின் முக்கிய தகவல்கள் மற்றும் மொபைல் எண்களையும் புகைபடங்களையும் பேக் அப் செய்யாமல் இருந்தனர்.

இந்த பிரச்னைக்கு எந்தெந்த விசயங்களுக்கு மக்கள் மூளையை உபயோகபடுத்தாமல் தங்கள் ஸ்மார்ட் போன் சாதனங்களை உபயோகபடுத்துகிறார்களோ அந்த அனைத்து தகவல்களையும் ஒரு மென்பொருளின் உதவி கொண்டு சேமித்து வைப்பதன் மூலம் தீர்வுகள் காணலாம் என சைபர் நிருவனத்தின் நிர்வாக இயக்குனர் திரு .கிரிஸ் டாகட் தீர்வு கூறியுள்ளார் . கூடுதலாக இந்தமாதியான மென்பொருள்களும் கை கொடுக்கவில்லை என்றால் உங்கள் அனைத்து தேவைப்படும் தகவல்களையும் ஒரு சிறு மெமரி கார்டில் சேமித்து வைப்பது சிறந்ததே !   மேலும் கூடுமானவரை சில முக்கிய தகவல்களுக்கு  போனில் மட்டுமல்லாமல்  மனதிலும்  நிலை நிறுத்தி வைப்பது ஆபத்து காலங்களில் நமக்கு கைகொடுக்கும்.  ஏனெனில் மனித  மூளை   மட்டுமே எப்போதும்  யாராலும்  திருட முடியாத ஒன்று !

Tuesday, November 10, 2015

கூகுள் தேடலில் ஆபாச தகவல்கள் தோன்றாமல் தடுப்பது எப்படி? (கணினி, ஸ்மார்ட் போன்)


"இணையத்தில் இல்லாத ஒரு தகவலே இல்லை" எனும் அளவுக்கு இணையத்தில் ஏராளமான தகவல்கள் குவிந்து கிடக்கின்றன.

கூகுள் பாதுகாப்பான தேடல் முறை


இருப்பினும் நாம் தேடும் தகவல் இருக்கக்கூடிய ஒரு இணையதளத்தை அடைந்து கொள்வதற்கு கூகுள், பிங் போன்ற தேடியந்திரங்கள் இன்றியமையாதவைகள் ஆகும்.


அந்த வகையில் இணையத்தின் மூலம் பல பயனுள்ள தகவல்களை பெற்றுக்கொள்ள முடிந்தாலும் அதன் மறுபக்கம் பார்க்கையில் பல அருவருக்கத்தக்க விடயங்களும் கூடவே இருக்கின்றன.

எனவே இணையத்தின் மூலம் நாம் தகவல்களை தேடிப்பெருவதற்கு பிரதானமாக பயன்படுத்தக் கூடிய கூகுள் தேடியந்திரத்தின் மூலம் தகவல்களை தேடும் போது ஆபாசமான தகவல்கள் தோன்றாமல் தடுத்துக் கொள்ளவும் முடியும்.


இதனை மேற்கொள்ள பின்வரும் வழிமுறைகளை பின்பற்றுக.


நீங்கள் இணையத்தை உங்கள் ஸ்மார்ட் போன் மூலம் பயன்படுத்துபவர் எனின்.


  • உங்கள் ஸ்மார்ட் போனில் உள்ள இணைய உலாவியை பயன்படுத்தி கூகுளின் முகப்புப்பக்கத்திற்கு செல்க.

கூகுள் தேடல் அமைப்புக்கள்

  • இனி குறிப்பிட்ட பக்கத்தில் கீழ் பகுதியில் தரப்பட்டுள்ள Settings ===> Search Settings என்பதை சுட்டுக.

ஸ்மார்ட் போனில் கூகுள் அமைப்புக்கள்
  • பின்னர் தோன்றும் சாளரத்தில் SafeSearch Filters என்பதற்குக் கீழ் இருக்கும் Filter explicit results என்பதை தெரிவு செய்க.
  • பின்னர் குறிப்பிட்ட பக்கத்தின் கீழ் பகுதியில் தரப்பட்டுள்ள Save என்பதை சுட்டி வெளியேறுக 

  • அவ்வளவுதான்.






      நீங்கள் கணினி மூலம் இணையத்தை பயன்படுத்துபவர் எனின் 



      கணினியில் கூகுள் தேடல் அமைப்புக்கள்

      • பின் குறிப்பிட்ட பக்கத்தில் இருக்கும் SafeSearch Filters என்பதற்குக் கீழ் இருக்கும் Turn On SafeSearch என்பதை Tick செய்க.

      கூகுள் தேடல் அமைப்புக்கள்

      • இனி குறிப்பிட்ட பக்கத்தின் கீழ் பகுதியில் தரப்பட்டுள்ள Save என்பதை சுட்டுக.

      அவ்வளவுதான்.


      இன்று கணினி மற்றும் ஸ்மார்ட் போன்களை சிறார்களும் சர்வ சாதரணமாக பயன்படுத்தி வருவதை அவதானிக்க முடிகிறது. எனவே இந்த வசதியை செயற்படுத்திக் கொள்வதன் மூலம் சிறார்கள் தவறான முறையில் இணையத்தை பயன்படுத்துவதில் இருந்தும் அவர்களை பாதுகாத்திட முடியும்.

    தமிழ் மொழியில் அழகிய கேலிச்சித்திரங்களை உருவாக்கிக் கொள்ள வேண்டுமா? (ஆண்ட்ராய்டு)

    அழகிய ஒட்டுக்களையும் (Sticker) கேலிச்சித்திரங்களையும் தமிழ் மொழியில் உறுவாக்கி அதனை பேஸ்புக்வாட்ஸ்அப், கூகுள் பிளஸ் ஆகிய வலைதளங்களின் ஊடாக உறவினர்கள், நண்பர்களுடன் பகிர்ந்து மகிழ விரும்புகிறீர்களா?



    அப்படியானால் கண்ணை கவரும் விதத்தில் அட்டகாசமான நகைச்சுவையான கேலிச் சித்திரங்களையும் ஓட்டுக்களையும் (Stickers) உருவாக்கிக் கொள்ள உதவுகிறது ஆண்ட்ராய்டுஸ்மார்ட் போன்களுக்கான Bobble எனும் செயலி.


    எளிமையாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த செயலியை எந்த ஒருவராலும் மிக இலகுவாக பயன்படுத்திக் கொள்ளலாம்.


    இந்த செயலியை நிறுவிய பின் இதனை திறக்கும் போது தோன்றும் சாளரத்தின் ஊடாக உங்கள் புகைப்படங்களை எடுத்து இந்த செயலிக்கு உள்ளிட்டுக் கொள்ள முடியும்.



    ஒன்றுக்கு மேற்பட்ட புகைப்படங்களை உள்ளிட்டுக்கொள்ள விரும்பினால் இந்த செயலியின் இடது மேல் மூலையில் தரப்பட்டுள்ள மூன்று கோடுகளால் ஆன மெனு Button ஐ சுட்டும் போது தோன்றும் Heads என்பதன் ஊடாக உள்ளிட்டுக் கொள்ள முடியும்.



    இனி இந்த செயலியின் பிரதான இடைமுகத்தில் தரப்பட்டுள்ள Stickers என்பதை  சுட்டுவதன் மூலம் அழகிய பல ஒட்டுக்கள் தோன்றுவதை அவதானிக்கலாம். அவற்றுள் நீங்கள் விரும்பும் வாசகங்களை சேர்த்துக் கொள்ள விரும்பினால் குறிப்பிட்ட பக்கத்தின் மேற்பகுதியில் தோன்றும் கட்டத்தில் நீங்கள் விரும்பும் வாசகங்களை தமிழ் மொழியிலேயே இட்டுக் கொள்ளலாம்.



    அதே போல் இந்த செயலியின் பிரதான இடைமுகத்தில் தரப்பட்டுள்ள Stories எனும் பகுதி மூலம் ரஜினிகாந்த், பராக் ஒபாமா, விராட் கோலி போன்ற இன்னும் பல உலக பிரபலங்களின் முகங்களுடன் எமது முகங்களையும் ஒன்றிணைத்து  கருத்தாழம் மிக்க , நகைச்சுவையான, வேடிக்கையான கேலிச்சித்திரங்களை உருவாக்கிக் கொள்ள முடியும்.



    இவ்வாறு நாம் உருவாக்கும் ஒட்டுக்கள் மற்றும் கேலிச்சித்திரங்களை வாட்ஸ்அப் மூலம் மிக இலகுவாக பகிர்ந்து கொள்வதற்கான Chat Head வசதியும் இதில் தரப்பட்டுள்ளது. (கீழே படத்தில் உள்ளவாறு)



    இவைகள் தவிர  இன்னும் பல வசதிகளை தரும் இந்த செயலியை பின்வரும் இணைப்பு மூலம் உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போனுக்கு தரவிறக்கிக் கொள்ள முடியும்.



    குறிப்பு: இந்த செயலி இதுவரை கூகுள் ப்ளே ஸ்டோரில் அறிமுகப்படுத்தப்படவில்லை இருப்பினும் மேலே தரப்பட்டுள்ள இணைப்பு மூலம் குறிப்பிட்ட செயலியின் APK கோப்பை தரவிறக்கி உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போனில் நிறுவிக் கொள்ளலாம்.

    Sunday, November 8, 2015

    Facebook ல் unfriend செய்தவர் யார் என்று அறிய உதவும் நீட்சி

    எமது எண்ணங்கள் கருத்துக்களை உறவினர்கள், நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கு இன்று Facebook தளம் மிகச்சிறந்த ஒரு களமாக உருவெடுத்துள்ளது.


    unfriend notify


    அந்தவகையில் முகநூல் தளத்தை பயன்படுத்தும் நாம் எமக்குத் தெரிந்த நண்பர்களை எமது நண்பர்கள் பட்டியலில் இணைத்துக்கொள்ள அவர்களுக்கான "நண்பர் கோரிக்கையை" அனுப்புவோம் அல்லவா?


    அதே போன்று நாம் யாருக்கெல்லாம் அறிமுகமாக இருக்கின்றோமோ அவர்களால் எமக்கும் "நண்பர் கோரிக்கை" விடுக்கப்படும் அல்லவா?

    மேற்கூறிய சந்தர்பங்களிலும் குறிப்பிட்ட நண்பர் கோரிக்கையை ஒருவர் ஏற்றுக்கொண்ட பின்னும் அது தொடர்பான அறிவித்தல் எமக்கு Notification ஆக காண்பிக்கப்படும்.

    இருப்பினும் எம்மை நண்பர் பட்டியலில் இருந்து எமது நண்பர் ஒருவர் எம்மை நீக்கி விட்டால் அதனை முகநூல் தளம் எமக்கு அறியத்தரமாட்டாது. 

    இருப்பினும் Google Chrome இணைய உலாவிக்கான ஒரு நீட்சியை நிறுவுவதன் மூலம் இவ்வாறு நம்மை நண்பர் பட்டியலில் இருந்து நீக்கும் நபர் யார் என்பதை அறிந்து கொள்ள முடியும்.

    குறிப்பிட்ட நீட்சியை நிறுவிய பின் உங்கள் நண்பர் பட்டியலில் Lost Friends எனும் புதியதொரு பகுதி தோன்றியிருப்பதனை அவதானிப்பீர்கள்.


    facebook Lost Friends extension tamil


    பின் அதனை சுட்டுவதன் மூலம் உங்களை நண்பர் பட்டியலில் இருந்து நீக்கிய நண்பர் யார் என்பதை அறிந்துகொள்ள முடியும்.

    இந்த நீட்சியை உங்களது Chrome இணைய உலாவிக்கும் நிறுவிக்கொள்ள விரும்பினால் கீழுள்ள இணைப்பில் செல்க.


     
    Back To Top
    Copyright © 2014 Tamil Explore. Designed by OddThemes